(நெவில் அன்தனி)
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)
டயலொக் பாடசாலைகள் றக்பியில் கடந்த வருடம் ஈட்டிய இரட்டை வெற்றியைக் தக்கவைப்பதைக் குறிக்கோளாக்கொண்டு இந்த வருடம் களம் இறங்கவுள்ள பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரி தனது றக்பி அனுசரணையாளர்களைப் பாராட்டி கௌரவித்தது.
இலங்கை பாடசாலைகள் றக்பி வரலாற்றில் பாடசாலை ஒன்றினால் அனுசரணையாளர்கள் கௌரவிக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
இந்த வருடம் டயலொக் பாடசாலைகள் றக்பி பருவ காலம் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில் தமது அனுசரணையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வைபவத்தை பிரமாண்டமான வகையில் புனித பீட்டர் கல்லூரியும் அதன் றக்பி மன்றமும் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த வைபவத்தின்போது புனித பேதுருவானவர் கல்லூரி றக்பிக்கான புதிய இலச்சினையும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
இந்த வருடம் புனித பீட்டர் கல்லூரிக்கு பிரதான அனுசரணையை உலகப் பிரசித்தி பெற்ற TDM இன்டர்நெஷனல் வழங்குகிறது.
இதனைவிட கார்கில்ஸ் டெய்ரீஸ் பிறைவேட் லிமிட்டெட் மற்றும் கொத்மலே (பிளட்டினம்), அட்மோஸ் சொலூஷன் INC (தங்கம்), ஏ ஜே மெடிச்செம் மற்றும் கோடோன் க்ளோதிங் (வெள்ளி), ஹேமாஸ் ஹொஸ்பிட்டல் மற்றும் சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் (வெண்கலம்) ஆகிய நிறுவனங்களும் அனுசரணை வழங்குகின்றன.
தனிப்பட்ட சிலரும் பாடசாலை றக்பியின் மேம்பாட்டுக்காக தாராள உதவிகளை வழங்கியுள்ளனர்.
தங்கள் பாடசாலையின் றக்பி அணிக்கு அனுசரணை வழங்கிய நிறுவனங்களையும் தனிப்பட்டவர்களையும் பாராட்டும் அதேவேளை, இந்த வருடமும் பாடசாலைகள் றக்பி பருவ காலத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் குறிக்கோளுடன் புனித பீட்டர் றக்பி அணி விளையாடும் என கல்லூரி முதல்வர் அருட்தந்தை ரோஹித்த ரொட்றிகோ அடிகளார் தெரிவித்தார்.
'வீரர்களை சிறந்த பண்பாளர்களாக்குவதே எமது முழு நோக்கம். மேலும் எமது பாடசாலையின் விளையாட்டுத் திட்டமானது ஆற்றல்மிக்கவர்களை உருவாக்கியுள்ளது. பல வெற்றிகளைக் கொடுத்துள்ள றக்பிதான் எமது பாடசாலையில் பிரதான விளையாட்டாகும். அனுசரணையாளர்களின் மனமுவந்த ஆதரவு எமது வீரர்களின் வளமான பயணத்திற்கு உதவும்' என அருட்தந்தை மேலும் கூறினார்.
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் போட்டிகளில் பங்குபற்றும் புனித பேதுருவானவர் அணி றோயல், திரித்துவம், புனித ஜோசப், புனித அந்தோனியார், பரிசுத்த தோமஸ் ஆகிய அணிகளுடன் வழமையான பாரம்பரிய றக்பி போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM