எத்தியோப்பியாவில் பழங்குடியினரிடையில் வருடா வருடம் இடம்பெறும் விநோத போட்டி இவ்வருடமும் இடம்பெற்றுள்ளது.

தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஓமோ ஆற்றின் அருகில் போடி எனப்படும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியன இவர்களின் பிரதான தொழிலாகும். மேலும் ஆற்றின் கரையோரங்களில், கோப்பி மற்றும் சோளம் போன்ற பயிர்ச் செய்கைகளிலும் ஈடுபடுவர்.

குறிப்பாக இந்த இனத்தின் ஆண்கள் மிகவும் பருத்த தோற்றத்தில் காணப்படுவர். இவர்கள் கூடுதலாக காட்டு தேனை உண்டு வருவதால் இவ்வாறு உடல் பருத்து காணப்படுவர்.

சிலவேளை இங்குள்ள ஆண்கள் இடுப்பை சுற்றி மாத்திரம் பருத்தி துணித் துண்டை அணிவார்கள். அல்லது நிர்வாணமாக இருப்பார்கள்.

இந்நிலையில் இந்த பழங்குடியினர் இடையே வருடா வருடம் விநோனமான போட்டியொன்று இடம்பெற்று வருகின்றது. அதாவது ஆண்களின் பருத்த உடலின் இடையளவை அளந்து பார்ப்பதாகும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள திருமணமாகாத ஆண்கள் இந்தப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்பது இவர்களின் மரபு.

இப்போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு பழங்குடியினரால் கேடயம் வழங்கப்பட்டு புகழ் சூட்டப்படும்.

இப்போட்டியில் பங்கு பெறும் ஆண்கள் போட்டி நடைபெறுவதற்கு ஆறுமாதங்களுக்கு முன்னரே மாட்டின் பாலையும், இரத்தத்தை உணவாக உட்கொள்வார்கள். 

போட்டியில் பங்குபெறும் ஆண்கள் ஆறு மாதங்களுக்கு தாம் தங்கயிருக்கும் குடில்களுக்கு  செல்ல முடியாது. இவர்களுக்கு தேவையான பால் மற்றும் மாட்டின் இரத்தம் போன்றவற்றை ஒவ்வொரு நாள் காலையிலும் பெண்கள் கொண்டுச் சென்று கொடுப்பார்கள்.

இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற போட்டியிலும் ஒருவர் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.