மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு மரதன் ஓட்டப் போட்டி!

25 May, 2024 | 04:17 PM
image

'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்'  எனும்  தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருடாந்தம் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் விழிப்பணர்வு மரதன் ஓட்டப் போட்டி இன்றைய தினம் சனிக்கிழமை (25) காலை மன்னாரில் இடம் பெற்றது. 

மன்னார் நலன் புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் உதவியுடன் மன்னார் மாவட்டச் செயலகத்தின் அனுமதியுடன் மன்னார்  மாவட்ட விளையாட்டு அதிகாரி தலைமையில் இன்று சனிக்கிழமை (25) காலை 6.50 மணியளவில் குறித்த மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. 

இதன் போது விருந்தினராக வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்,மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டிலிசன் பயஸ் , வைத்தியர் ஜோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.  

16 வயதுக்கு மேற்பட்ட ஆண் போட்டியாளர்கள் 36 பேர்  குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.  

இதன் போது 1 ஆம் இடத்தை மன்னார் சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜே.ஜெபகுமர்,2 ஆம் இடத்தை முருங்கனைச் சேர்ந்த ஏ.அனான்சன்,  3 ஆம் இடத்தை காத்தான் குளம் கிராமத்தைச் சேர்ந்த   கே.தீசன்,4 ஆம் இடத்தை எருக்கலம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த என்.எம்.நிப்ரான், 5 ஆம் இடத்தை ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜே.துவாரகன் ஆகியோர் பெற்றுக் கொண்டதுடன் அவர்களுக்கான பண பரிசில்களும் விருந்தினர்களின் வழங்கி வைக்கப்பட்டது. 

முதல் 10 இடங்களை பெற்ற வீரர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19