இந்தியாவில் கர்ப்பிணியான மனைவியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை

25 May, 2024 | 04:05 PM
image

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய கர்ப்பிணியான மனைவியின் வயிற்றைக் கிழித்த கொடூர கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில்  படவுனில் வசித்து கணவன் மனைவிக்கு 5 பெண் குழந்தைகள் இருந்துள்ளது.

இந்நிலையில் கணவன் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று அனிதாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட மனைவியின் பெற்றோரிடம், உங்களது மகளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து ஆண் குழந்தைக்கு தந்தையாகி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று தனக்கு தெரிந்தாக வேண்டுமென்று கணவன் சண்டையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று வயிற்றைக் கிழித்து பார்த்து தெரிந்துகொள்வதாக கூறி மனைவியின் வயிற்றில் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் மனைவி பலத்த காயமடைந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கணவன் மீது மனைவியின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13