(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது.
இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார்.
சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது.
பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும்.
பாகிஸ்தான் குழாம்
துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான்.
சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான்.
பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM