கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஊடக சந்திப்பில், கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் பேசிய கதிர்காமநாதன் கோகிலவாணி,
'கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விஜயம் செய்கிறார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தோம். அந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது' என்றார்.
'யுத்த காலத்தில் இராணுவத்திடம் எங்கள் பிள்ளைகளை நேரடியாக ஒப்படைத்தோம். விசாரணைக்கு என்று அழைத்து செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்படட எமது பிள்ளைகள் தொடர்பாக இன்றுவரை எமக்கு நீதி கிடைக்கவில்லை. எத்தனையோ போராட்டங்கள் மூலமும் ஊடகங்கள் வாயிலாகவும் எமது கவலைகளை வெளியிட்டும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.
'யுத்த காலங்களில் உண்ண உணவின்றி உப்புக் கஞ்சி குடித்து உயிரை காத்துக் கொண்டோம் அதனை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எடுத்து காட்டும் முகமாகவே ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. நினைவு கஞ்சியை இராணுவம் மற்றும் பொலிசார் காலால் தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்துள்ளனர்.
'ஆனால் இன்று நாடு பூராகவும் வெசாக் பெருநாளை முன்னிட்டு அன்னதானம், நீராகாரம் ஆகியவற்றை மக்களுக்கு வழங்குகின்றனர். அதற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தப்படுவதில்லை. அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வி எழுகின்றது. இதன் காரணமாகவே ஐனாதிபதியின் வருகையை நாங்கள் எதிர்க்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாடுகளுக்கு ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறோம்' என மிகுந்த கவலையோடு அந்தப் பெண் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM