கொழும்பில் உள்ள கங்காராமை சீமாமாலகயவில் நடைபெறும் 'புத்த ரஷ்மி' தேசிய வெசாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புத்த பெருமானின் வாழ்வினை நவீன இந்திய ஓவிய விற்பன்னர்களின் படைப்புகள் மூலமாக காண்பிக்கும் 'புத்தம் சரணம் கச்சாமி' என்ற தலைப்பிலான விசேட கண்காட்சி கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் கங்காராமை விகாரை ஆகியவற்றால் கூட்டாக ஒழுங்கமைக்கப்பட்ட புத்த ரஷ்மி வலயம் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்கவால் திறந்துவைக்கப்பட்ட நிலையில் கண்காட்சியும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 23ஆம் திகதி நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வுகளில் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
ஞானம், கருணை மற்றும் சமாதானத்தின் பிரபஞ்ச விழுமியங்களை உள்ளடக்கிய பௌத்த ஓவியங்களின் ஆன்மிக மற்றும் மெய்மயக்கும் கட்புல உள்ளுணர்வைத் தரும் டிஜிட்டல்மயமான படைப்புகளுள் பார்வையாளர்கள் மூழ்கித் திளைக்கும் அனுபவத்தை இக்கண்காட்சி தருகின்றமை இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்தியாவின் புது டில்லியில் உள்ள நவீன ஓவியங்களின் தேசிய கலாபவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இக்கண்காட்சி முதல் தடவையாக 2023 வெசாக்கின்போது புது டில்லியில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
மே 23ஆம் திகதி இரவு 07.00 மணி முதல் 26ஆம் திகதி வரை இக்கண்காட்சியை பார்வையிட முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM