உலகளாவிய தேடப்படும் ரோட்டரி நிகழ்வு என்பது நெட்வொர்க்கிங் மற்றும் கற்றல் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வாகும் .
2024 மாநாடு, உலகெங்கிலுமுள்ள இருபத்தையாயிரம் ரோட்டரி உறுப்பினர்களை அழகான சிங்கப்பூருக்கு ஈர்க்கும் நிகழ்வாகும் சிலர் இதனை சிறு ஐக்கிய நாடுகள் சபை என்றும் விவரிக்கிறார்கள் .
இது சர்வதேச எதிர்பார்ப்புகளையும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும் கொடுக்கிறது .அங்கு உலகத்தலைவர்கள் ஒன்றுகூடி உலகம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வுகளை கண்டறிகின்றனர் .
வருடாந்த மாநாட்டில் நடைபெறவுள்ள ரோட்டரி அறக்கட்டளை நன்கொடையாளர் உச்சி மாநாட்டில் பேச்சாளராக இலங்கை மற்றும் மாலைதீவு றோட்டரிக்கான இலங்கையின் முதல் பெண் ஆளுநர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ரோட்டரி தலைவர் கோர்டன் மேக்கினலி இந்த ஆண்டை " உலகுடன் நம்பிக்கையை உருவாக்கு "என்கிற கருப்பொருளை கூறியுள்ளார்.
செல்வி கௌரி ராஜன் அவர்கள் ஒரு விருது பெற்ற வணிக நிபுணராக கண்டி குண்டசாலையை தளமாக கொண்ட சன் மேட்ச் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
இது பாதுகாப்பான தீப்பெட்டி பிரிவில் சந்தையில் முன்னணியில் உள்ளது மற்றும் பலதரப்பட்ட கூட்டு நிறுவனமாக உள்ளது .
இந்த மாநாடு மே 25 முதல் 29 வரை மெரினா பே சாண்ட்ஸ் எக்ஸ்போ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது .
இந்த பதிப்பில் தனித்துவமான உலகத்தரம் வாய்ந்த பேச்சாளர்கள் தனித்துவமான சிறந்த உணவு அனுபவங்கள் மற்றும் உலகின் அதிநவீன மனிதாபிமான பிரச்சினைகளில் பன்முகத்தன்மை போன்றவை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM