உலக பரா ஈட்டி எறிதலில் உத்தியோகப்பற்றற்ற முடிவின் பிரகாரம் தினேஷ் ஹேரத் இரண்டாம் இடம் ; வகைப்படுத்தல் தொடர்பான ஆட்சேபம் எழுப்பப்பட்டுள்ளது

Published By: Vishnu

24 May, 2024 | 09:35 PM
image

(நெவில் அன்தனி)

ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எரிதல் போட்டிக்கான உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் பிரகாரம் தினேஷ் ப்ரியன்த ஹேரத் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பரா மெய்வல்லுநர்களை வகைப்படுத்துதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபம் காரணமாக உத்தியோகபூர்வ போட்டி முடிவு இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனை தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் போட்டி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என உலக பரா மெய்வல்லுநர் சங்கம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

தினேஷ் ப்ரியன்த ஹேரத் ஈட்டியை 64.59 மீற்றர் தூரத்திற்கு எறிந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

எட்டு நாடுகளைச் செர்ந்த 12 பரா வீரர்கள் பங்குபற்றிய இப் போட்டியில் தினேஷ் ப்ரியன்த தனது 2ஆவது முயற்சியில் இத் தூரத்தைப் பதிவுசெய்திருந்தார்.

ஐந்து முயற்சிகள் வரை முதலிடத்தில் இருந்த தினேஷ் ஹேரத், கியூபா வீரரின் கடைசி முயற்சி முடிவை அடுத்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அப் போட்டியில் கியூபா வீரர் வரோனா கொன்ஸாலஸ் தனது கடைசி முயற்சியில் 65.16 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மைதானத்திற்கான சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றார்.

இந்தியாவின் ரின்கு (62.77 மீற்றர்) மூன்றாம் இடத்திலுள்ளார்.

இப் போட்டிக்கான உத்தியோகபூர்வ முடிவு நாளைக் காலை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

போட்டி முடிவில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதி. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38