(நெவில் அன்தனி)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாத்தின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணியைத் தீர்மானிக்கும் இரண்டாவது தகுதிகாண் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இந்தத் தீர்மானம் மிக்கப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ராஜஸ்தான் றோயல்ஸ் எதிர்த்தாடவுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான முதலாவது தகுதிகாணில் தோல்வி அடைந்ததால் இன்றைய இரண்டாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடவுள்ளது.
மறுபுறத்தில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவிவந்த நிலையில் நீக்கல் போட்டியில் பலம்வாய்ந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிகொண்டதன் மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் இரண்டாவது தகுதிகாணில் விளையாட தகுதிபெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் எந்த அணி பலம் வாய்ந்தது என தீர்மானிப்பது கடினமானது.
ஆனால், லீக் போட்டிகளில் இரண்டு அணிகளினதும் ஆற்றல் வெளிப்பாடுகளை நோக்கும் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் திறமை சற்று மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
இந்த சுற்றுப் போட்டியில் அணிக்கான அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்குரிய சாதனையை முறியடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதனைப் புதுப்பித்த பெருமையையையும் பெற்றுக்கொண்டது.
றோயல் செலஞ்சர்ஸ் பூனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக 2013இல் குவித்த அதிகூடிய மொத்த எண்ணிக்கையான 5 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த வருடம் 3 தடவைகள் கடந்ததன் மூலம் அதன் துடுப்பாட்ட பலம் எத்தகையது என்பது புலனாகிறது.
ராஜஸ்தான் றோயல்ஸின் அதிகூடிய மொத்த எண்ணிக்கை 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களாகும். இந்த எண்ணிக்கையை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் பெற்றிருந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சாதனை எண்ணிக்கைகளில் பெரும் பங்காற்றியவர்கள் அதிரடி ஆட்டக்காரர்களான ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோராவர். அவர்கள் இருவரும் பவர் ப்ளேயில் பந்துவீச்சாளர்களை சுழற்றி அடித்தது அற்புதமாக இருந்தது.
அவர்கள் இருவரும் இன்றைய போட்டியிலும் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்துவதற்கு ராஜஸ்தான் றோயல்ஸ் புதிய வியூகங்களைப் பிரயோகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் விஜயகாந்த் வியாஸ்காந்துக்குப் பதிலாக ஏய்டன் மார்க்ராம் அல்லது க்லென் பிலிப்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை அணியில் இணைக்க வாய்ப்புள்ளது. ஆனால், பந்துவீச்சில் இம்ப்பெக்ட் வீரராக வியாஸ்காந்த் விளையாட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, நீக்கல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதல் சுற்று போட்டியில் கடைசிப் பந்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றிருந்தது.
அணிகள் (பெரும்பாலும்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ராகுல் த்ருப்பதி, ஏய்டன் மார்க் ராம், க்ளென் பிலிப்ஸ் அல்லது விஜயகாந்த் வியாஸ்காந்த், நிட்டிஷ் குமார் ரெட்டி, ஹென்றிச் க்ளாசென், அப்துல் சமாத், ஷாஹ்பாஸ் அஹ்மத், பெட் கமின்ஸ், புவ்ணேஷ்வர் குமார், மயான்க் மார்கண்டே, ரி. நடராஜன்.
ராஜஸ்தான் றோயல்ஸ்: யஷஸ்வி ஜய்ஸ்வால், டொம் கொஹியர்-கெட்மோர், சஞ்சு செம்சன் (தலைவர்), ரியான் பராக், த்ருவ் ஜுரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் அல்லது கேஷவ் மஹாராஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், ட்ரென்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்த்ர சஹால்.
(இரண்டு அணிகளிலும் இம்ப்பெக்ட் வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM