தொழிலதிபராக உயர்வதற்குரிய எளிய பரிகாரங்கள்...- 2

24 May, 2024 | 05:46 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது வாழ்வாதாரத்திற்காக அரசாங்கத்தின் பணி வாய்ப்புகளை மட்டும் நம்பி காத்துக் கொண்டிருக்காமல்.., தங்களுக்கு தெரிந்த தொழில்களை கற்றுக்கொண்டு வங்கி மூலமாகவோ அல்லது தெரிந்த நண்பர்கள் மூலமாகவோ சிறிய அளவிலான கடன்களை பெற்று தொழிலைத் தொடங்கி இருப்பர். அதே தருணத்தில் ஆன்மீகப் பெரியோர்களிடத்திலும், ஜோதிட நிபுணர்களிடத்திலும் தங்களது ஜாதகத்தை காண்பித்து எங்கு விற்பனை நிலையத்தை தொடங்கலாம்? எந்த தருணத்தில் தொடங்கலாம்?

எம்மாதிரியான சிறப்பு பூஜைகளை மேற்கொள்ளலாம்? என்பது குறித்த ஆலோசனைகளையும் கேட்டிருப்பர்.‌ அவர்களும் அதற்கு உங்களது ஜாதகத்தை ஆய்வு செய்து குறிப்பாக தொழில் மற்றும் லாபம் குறித்த பாவகங்களை பரிசீலித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கி இருப்பர். நீங்களும் வணிக நிலையத்தை தொடங்கும் போது அதீத ஆர்வத்துடனும் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று திட்டமிட்டும் பணிகளை தொடங்கி இருப்பீர். ஆனால் மூன்று மாதம் அல்லது நான்கு மாதங்களில் விற்பனை மந்தமடைந்து லாபம் குறைந்து நஷ்டத்தை சந்திக்க தொடங்கி இருப்பீர். இந்நிலையில் இதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருப்பீர்கள். இவர்களுக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உரிய பரிகாரங்களை வழங்கியுள்ளனர்.

உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும்.. அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் உள்ள அல்லது பத்தாமிடத்தின் அதிபதி ரிஷப ராசியில் இருந்தால்... உதாரணமாக நீங்கள் மிதுன லக்னமாக இருக்கிறீர்கள் என்றால்.. உங்களுடைய பத்தாமிடமான மீன வீட்டின் அதிபதியான குரு .. உங்களுடைய ராசி கட்டத்தில் ரிஷப ராசியில் இருந்தால்... எம்மாதிரியான பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதனை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.‌

நீங்கள் நாளாந்தம் அணிந்து கொள்ளும் ஆடைகள் மீது ஜவ்வாது, சந்தனம் என பல வகையினதான வாசனை திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.  அதே தருணத்தில் நீங்கள் அணியும் ஆடை பட்டாலான ஆடையாக இருந்தால் தனி சிறப்பு. ஏனெனில் மெல்லியதாக இருக்கும் பட்டாடைகள் அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி வழங்கும்.‌ எம்மில் சிலருக்கு பட்டாடை அணிவதில் உடன்பாடு இருக்காது. இவர்கள் தொழில் நடத்தும் இடத்தில் சிறிய அளவிலான பட்டுத் துணியை வைத்துக் கொண்டு அதன் மீது வாசனை திரவியத்தை தெளித்து பண பெட்டி அல்லது நீங்கள் பொக்கிஷமாக கருதுமிடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஜன வசியம் மற்றும் ஜக வசியம் ஏற்பட்டு தொழிலில் புதிய வாடிக்கையாளர்களையும், புதிய ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தி தொழில் துறையில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

தொழில் செய்யும் இடத்தில் நீங்கள் வைத்து வணங்கும் இறைவனின் உருவப் படங்களுக்கு டைமண்ட் கல்கண்டை வெள்ளை வண்ண பீங்கான் பாத்திரத்தில் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு வந்தால், நேர் நிலையான ஆற்றல் பரவி வணிகம் அதிகரித்து லாபம் மேலோங்கும்.  நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களுக்கு உங்கள் கைகளால் டைமண்ட் கல்கண்டை கொடுத்தால் அதனூடாக புதிய வாடிக்கையாளர்களை வரவழிக்கும் சூட்சமம் புரிய தொடங்கும்.

தொழில் நடத்துபவர்கள் ஆண்களாக இருந்தால் அவர்கள் திருமணம் ஆகி இருந்தால் மனைவியை தவிர வேறு எந்த பெண்ணிடமும் தொடர்பு கொள்ளக் கூடாது. அதையும் கடந்து சபலம் காரணமாக சிறிய அளவில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலும்... இதனாலேயே தொழிலில் சிக்கல்களும், பிரச்சனைகளும் உண்டாகும். இதன் காரணமாக வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிக்கும். சிலர் சஞ்சலத்தின் காரணமாகவோ அல்லது சலனத்தின் காரணமாகவோ வணிக நிறுவனத்தில் உடன் பணியாற்றும் பெண்மணியிடமோ அல்லது இளம் பெண்களிடமோ தவறான எண்ணத்துடன் பழகினால் அது தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்துவதுடன் தொழில்துறையில் உங்களுக்கு அவமானத்தையும் உண்டாக்கும்.

நீங்கள் வணிக நிறுவனத்தில் இருக்கும் போதோ அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது வெளியிடங்களுக்கு பயணிக்கும் போதோ முகமறியாத ஒருவர் யாசகம் கேட்கும் போது உடனடியாக உங்களது வாயிலிருந்து 'இல்லை' என்ற சொல்லை உச்சரிக்காமல்... உங்கள் பைகளில் இருக்கும் சிறிய அளவிலான பொருளை பணமாகவோ அல்லது பொருளாகவோ அல்லது அவர்கள் விரும்பும் உணவாகவோ... ஏதேனும் ஒன்றை கொடுத்து விட வேண்டும்.  மன அழுத்தம் காரணமாகவோ நெருக்கடி காரணமாகவோ யாசகம் கேட்பவர்களிடம் 'இல்லை' என்று சொல்லிவிட்டால்... இதன் காரணமாகவே உங்களுக்கு நஷ்டம் ஏற்பட தொடங்கும்.

நீங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏதேனும் ஒரு மாதத்தில் பிறந்திருப்பீர்கள். அந்த மாதத்தில் அதாவது நீங்கள் பிறந்த மாதத்தில் எந்த காரணத்தை கொண்டும் புதிய காலணியை வாங்கி அணிந்து கொள்ளக் கூடாது. அதையும் கடந்து சூழல் காரணமாக புதிய காலனியை அணிந்து கொள்ள நேர்ந்தால்... இதன் காரணமாகவே தொழிலில் புதிதாக போட்டியாளர்களும், மறைமுகமான பிரச்சனைகளும் உருவாகும். அதனால் இந்த விடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும் உங்கள் லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி ரிஷப ராசியில் இருந்தால்... இந்த பரிகாரங்களை தொடர்ச்சியாக செய்தால்... தொழிலில் எதிர்பார்க்காத அளவிற்கு முன்னேறி ஒப்பற்ற தொழிலதிபராக மிளிர முடியும்.

தொகுப்பு : சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59
news-image

சனியின் தாக்கத்தை குறைக்கும் எள்ளுருண்டை !

2024-12-31 15:15:31