அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் - வாக்காளர்களுக்கு அஸாதுதீன் ஓவைசி வேண்டுகோள்!

24 May, 2024 | 04:38 PM
image

இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலின் போது வாக்காளர்கள் அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்' என அகில இந்திய மஜ்லீஸ் ஈ- இதெஹாதுல் முஸ்லிமீன் எனும் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புல்பூர் தொகுதியில் ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் புல்புரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அகில இந்திய மஜ்லீஸ் ஈ. இஹாதெதுல் முஸ்லீமின் எனும் கட்சியின் தலைவரான அஸாதுதீன் ஒவைசி பேசியதாவது..

'' கடந்த தேர்தல்களில் காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சி, ஜனதா தளம், ஜனதா கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்தீர்கள். ஆனால் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. யாருக்கு வாக்களித்தீர்களோ...! அவர்களின் தலைவிதி மாறிவிட்டது. தில்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் யாரை வெற்றி பெற செய்தீர்களோ...! அவர்கள் இன்று நம்மை அழிக்க நினைக்கின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அச்ச உணர்வுடனேயே வாக்களித்து வருகிறோம். அதனால் தான் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. நீங்கள் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும். வாக்கு என்பது நம்பிக்கை. அதை சரியாக பயன்படுத்துங்கள்'' என்றார்.

இதனிடையே தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாழும் இஸ்லாமியர்களிடையே செல்வாக்குடன் திகழும் அசாதுதீன் ஓவைசி தற்போது இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் இஸ்லாமியர்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம், பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் சிறிய கட்சிகளுடனும், கொள்கையுடன் ஒத்துப் போகும் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறார். உத்திர பிரதேச மாநிலத்தில் சில தொகுதிகளில் ஏ ஐ எம் ஐ எம் கட்சி- வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இவர்களுக்கு ஆதரவாக தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் அசாதுதீன் ஓவைசி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49