மத்திய மலைநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை! - மின்தடை, போக்குவரத்து பாதிப்பினால் மக்கள் அவதி

24 May, 2024 | 05:50 PM
image

மத்திய மலைநாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை, பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மின்தடையும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் தோட்டப் பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (23) வீதியின் குறுக்கே விழுந்ததன் காரணமாக பல மணித்தியாலங்கள் அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், விழுந்து கிடந்த பாரிய மரம் வெட்டி அகற்றப்பட்டதையடுத்து, அவ்வீதியின் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அப்பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மூங்கில் மரத்தின் குற்றிகள் பிரதான வீதியில் வீழ்ந்துள்ளதால் அவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிக அவதானமாக செல்ல வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவுகிற பலத்த காற்றினால் உயர் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், மஸ்கெலியா சிவனொளிபாதமலை நல்லதண்ணி பகுதியில் நேற்று (23) பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன், கொட்டகலை உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட முடியாமல் அப்பகுதிகளை சேர்ந்தோர் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 11:21:58
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:17:50
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25