துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை பலி ; சந்தேக நபர் கைது

24 May, 2024 | 02:23 PM
image

அனுராதபுரம், ஹித்தோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லகுளம் பிரதேசத்தில் நேற்று (23) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக திரப்பனை வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹல்மில்லகுளம் பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த காட்டு யானைக் கூட்டமொன்று  தோட்டத்திலிருந்த பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த நபரொருவர் இந்த யானைகளை விரட்ட முயன்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த யானை ஒன்று இவரைத் துரத்திச் சென்றுள்ள நிலையில் குறித்த நபர் தனது கையிலிருந்த துப்பாக்கியால் யானையைச் சுட்டுக் கொலை செய்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 அடி, 3 அங்குலம் உயரம் கொண்ட 20 வயதுடைய ஆண் யானையொன்றே உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ஹல்மில்லகுளம், துருவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால்,...

2024-07-19 20:35:12
news-image

பாதிக்கப்பட்ட தரப்பிடம் எமது பணிகளை கொண்டு...

2024-07-19 16:21:12
news-image

யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில்...

2024-07-19 19:58:48
news-image

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக...

2024-07-19 18:30:03
news-image

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட...

2024-07-19 18:25:02
news-image

மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

2024-07-19 19:57:08
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள்...

2024-07-19 17:36:02
news-image

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி...

2024-07-19 17:35:06
news-image

மூதூர் யுவதி கொலை : சந்தேக...

2024-07-19 20:38:20
news-image

22வது திருத்தம் குறித்த வர்த்தமானி ஜனாதிபதி...

2024-07-19 17:15:58
news-image

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக...

2024-07-19 17:34:54
news-image

ஜனாதிபதியின் செயற்றிட்டம் தொடர்பில் போலியான அறிக்கைகளை...

2024-07-19 16:42:29