வீதியில் வீழ்ந்திருந்த மரத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி

24 May, 2024 | 11:47 AM
image

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதுக்க - வக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (23) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வகயிலிருந்து பாதுக்க நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வீழ்ந்திருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் பாதுக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03