பப்புவா நியூ கினியில் பாரிய மண்சரிவு ; 100 பேர் உயிரிழந்திருக்கலாமென அச்சம்

Published By: Digital Desk 3

24 May, 2024 | 12:07 PM
image

பப்புவா நியூ கினியில் உள்ள தொலைதூர கிராமத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள காகலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 100 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என  குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமத்தில் அருகிலிருந்த மலைப்பகுதி சரிந்து வீழ்ந்தமையால் வீடுகள் தரைமட்டமாகியதாக கெரா பெண்கள் சங்கத்தின் தலைவர் எலிசபெத் லாருமா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களளில் குடியிருப்பாளர்கள் பெரிய பாறைகளை அகற்றுவதையும், இடிபாடுகள் மற்றும் வீழ்ந்த மரங்களின் அடியில் இருந்து உடல்களை மீட்பதையும் காணமுடிகிறது. 

மண்சரிவினால் பெரிய தங்கச் சுரங்கம் அமைந்துள்ள போர்கெரா நகருக்கான வீதியும் தடைபட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16
news-image

செங்கடல் பகுதியில் மீண்டும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின்...

2024-06-15 12:09:13
news-image

இடம்­பெ­யர்ந்த நிலையில் 120 மில்­லியன் மக்கள்...

2024-06-15 11:56:35
news-image

தாய்லாந்தில் ஆசிய யானை ஈன்ற அரிய...

2024-06-14 17:19:08
news-image

இறைவனின் புனித இல்லத்தினைத் தரிசிக்கும் யாத்ரீகர்களுக்கு...

2024-06-14 02:41:17
news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49