அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் அஹுங்கல்ல பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 4 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்காக துப்பாக்கி தாரிகளுக்குத் தகவல் வழங்கி உதவி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM