2013 ஆம் ஆண்டில் மாத்திரம் 1650 பெண்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்பு பணியகம் தெரிவித்தது.

குறிப்பாக கடந்த வருடங்களில் மாத்திரம் சவூதி அரேபியாவுக்கு இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பணிப்பெண்களாக சென்றுள்ளனர்.

2013 ஆம் ஆண்டில் மாத்திரம் 39ஆயிரத்து 870 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்றதாகவும் இவர்களில் 1650 பேர் தொழில் வழங்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.