காசாவில் இஸ்ரேலின் போர் தொடர்பில் இன்று சர்வதேசநீதிமன்றம் புதிய தீர்ப்பினை வெளியிடவுள்ளது.
இஸ்ரேல் சர்வதேசரீதியில் இராஜதந்திரரீதியாக தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ள சூழ்நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை நிறுத்தவேண்டும் என ஐசிசி உத்தரவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
இதேவேளை இஸ்ரேலிய பிரதமர் ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கவேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள்கள் குறித்தும் நீதிபதிகள் ஆராயவுள்ளனர்.
கடந்தவாரம் இஸ்ரேல் காசா மீதான தனது நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது. ரபா குறித்து தென்னாபிரிக்கா விசேடமாக வேண்டுகோள் விடுத்திருந்தது.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளன எனினும் அவை சர்வதேசரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேசநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM