களனி பல்கலைக்கழகத்தின் நாடகம், சினிமா மற்றும் புகைப்படக் கலைக்கழகமும் களனி பல்கலைக்கழகத்தின் கலைப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “ரூபா 2023” புகைப்படப் போட்டியில் திருகோணமலையைச் சேர்ந்த எஸ்.ஜனகன் விருது பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் “வாழ்க்கை முறை” எனும் பிரிவில் முதலாம் இடத்தையும் “இயற்கை மற்றும் வனவிலங்கு” எனும் பிரிவில் தகுதி விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
வெற்றியீட்டியவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி காலை 10.00 மணியளவில் கொழும்பு தேசிய அருங்காட்சியக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற இப்போட்டியானது பாடசாலைப் பிரிவு, பல்கலைக்கழக பிரிவு மற்றும் திறந்த பிரிவாகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் 1500 பேர் பங்குபற்றி 6500 புகைப்படங்களை அனுப்பியிருந்தனர்.
இந்த போட்டியானது உருவப்படப் பிரிவு, விளையாட்டுப் பிரிவு, வாழ்க்கை முறைப் பிரிவு, விளம்பரம் சார்ந்த பிரிவு, கட்டடக்கலைப் பிரிவு, ஊடகத்துறைப் பிரிவு, இயற்கை மற்றும் வனவிலங்குப் பிரிவு, நவநாகரிக பிரிவு, திருமணம் சார்ந்த பிரிவு ஆகிய தலைப்புகளின் கீழ் போட்டியாளர்களிடமிருந்து புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த புகைப்படப் போட்டியில் பங்குபற்றிய போட்டியாளர்களில் ஒவ்வொரு பிரிவிலும் 1ஆம், 2ஆம், 3ஆம் வெற்றியாளர்களும் தகுதி விருதுக்காக 5 பேருமாக 8 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM