ஜெனரேட்டரை இயக்கிவிட்டு உறங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழப்பு

23 May, 2024 | 06:50 PM
image

ஜெனரேட்டரை இயக்கிவிட்டு உறங்கச் சென்ற தந்தையும் மகனும் திடீரென உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புபுரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது தந்தையும் 17 வயது மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு புபுரஸ்ஸ பிரதேசத்தில் வெசாக் தானம் வழங்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் போது திடீரென அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இவர்கள் இருவரும் அறையொன்றிலிருந்த ஜெனரேட்டரை இயக்கிவிட்டு உறங்கச் சென்றுள்ள நிலையில் மறுநாள் காலை இருவரும் எழுந்திருக்காததால் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் அறையிலிருந்த ஜெனரேட்டரை இயக்கியதினால் அதிலிருந்து வெளியேறிய ஒருவித நச்சுத்தன்மைமிக்க வாயு காரணமாக இவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதிய...

2024-10-07 02:46:08
news-image

சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன்...

2024-10-06 19:19:17
news-image

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு ...

2024-10-06 19:01:28
news-image

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து...

2024-10-06 21:29:12
news-image

விண்ணைத் தொடும் தேங்காய் விலை

2024-10-06 20:03:19
news-image

கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த...

2024-10-06 19:43:27
news-image

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்...

2024-10-06 19:32:22
news-image

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுகட்சியின் சார்பில்...

2024-10-06 19:13:30
news-image

அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பொருளாதார நெருக்கடி...

2024-10-06 18:41:30
news-image

வெலிப்பன்னயில் தம்பதி சடலங்களாக மீட்பு !

2024-10-06 18:29:24
news-image

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான...

2024-10-06 17:11:55
news-image

அரிசியில் தவிட்டு சாயம்; யாழ். அரிசி...

2024-10-06 16:38:21