மன்னார் மாவட்டத்தில் தென் கடலுக்கு அருகாமையில் காணப்படும் வங்காலை கிராமத்துக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் படகுகளையும் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன்வாடிகளில் காணப்படும் கடற்றொழில் உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கும் செயற்பாட்டில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் சீரற்ற காலநிலையால் புதன்கிழமை (22) மன்னாரிலும் கடல்சார் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வங்காலை கிராமத்தை அண்டிய தென் கடல் திடீரென வங்காலை கடற்றொழிலாளர்களின் முக்கிய பிரதான பாதையை மேவி கிராமத்தை நோக்கி கடல் நீர் உட்புகத் தொடங்கியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடருமானால் அப்பகுதியில் கடல் அரிப்பால் பெரும் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் கடல்நீர் கிராமத்துக்குள் புகாதிருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராமத்து மக்களால் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடல் அரிப்பு தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டுச் செல்வதாகவும் அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீண்ட கால பயன்பாட்டில் உள்ள மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் நேற்று புதன்கிழமை (22) முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், தற்போது பயன்பாட்டில் உள்ள நீண்டகால மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM