தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்கள்..!?

Published By: Digital Desk 7

23 May, 2024 | 05:45 PM
image

தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும் தொழில் தொடங்குவதற்கு முன் குடும்ப சோதிடர்களிடமும், ஆன்மீக பெரியோர்களிடமும் தங்களது ஜாதகத்தை காண்பித்து எந்தத் தொழில் சிறப்பாக இருக்கும்? அதனை எப்போது தொடங்கலாம்? என ஆலோசனையைக் கேட்டிருப்பர்.‌ பலரும் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொழிலைத் தொடங்கி கடினமாகவும், புத்திசாலித்தனமாகவும், சாமர்த்தியமாகவும், சாதுரியமாகவும் உழைத்து முன்னேறிக் கொண்டிருப்பர். ஆனால் சிலர் அவர்களுடைய முன்னேற்ற பாதையில் தடை உருவாகி, வளர்ச்சி என்பது தேக்கமடைந்திருக்கும். இவர்கள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை களையவும் திட்டமிட்டிருப்பார்கள். இந்நிலையில் தொழில்துறையில் உள்ளவர்கள் முன்னேற வேண்டும் என்றால் எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் பல  பயனுள்ள குறிப்புகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

உங்களது ஜாதகத்தில் லக்னாதிபதி அல்லது லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாமிடத்தின் அதிபதி மேஷத்தில் இருந்தால் உதாரணத்திற்கு நீங்கள் மிதுன லக்னமாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பத்தாமிடமான மீன வீட்டின் அதிபதியான குரு உங்களுடைய ராசி கட்டத்தில் மேஷ ராசியில் இருந்தால் 

நீங்கள் உங்களுடைய இல்லத்தில் நெல்லிக்காய் செடியை வளர்க்கக்கூடாது. அதேபோல் யாரேனும் சாப்பிடவோ அல்லது தானமாகவோ பொருளைக் கொடுத்தால் வாங்கக்கூடாது. அதையும் கடந்து கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு ஈடாக வேறு ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நயமாக பேசி வழங்கி விட வேண்டும்.

அதே தருணத்தில் நீங்கள் நாளாந்தம் உங்களுடைய தொழில் நடத்தும் இடத்தில் சிவப்பு வண்ண கைகுட்டை வைத்திருப்பது நல்லது. இதனை கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தால் சிவப்பு வண்ண ஆடையை உடுத்திக் கொள்ளலாம். இதனால் முக வசியம் ஏற்பட்டு தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

மேலும் வலது கையில் வெள்ளியினாலான காப்பினை அணிவது சிறப்பு.‌  பெண்களாக இருந்தால் வெள்ளியினாலான வளையலை அணியலாம்.

அதே தருணத்தில் உங்கள் தொழிலில் யாரேனும் குழப்பம் விளைவித்தாலோ அல்லது நீங்கள் குழம்பினாலோ அதிலிருந்து விலகி நன்மை பெறுவதற்கு நீங்கள் நாளாந்தம் உறங்கும் போது தலைக்கு அருகே ஒரு கோப்பையில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். இந்த நீரை காலையில் எழுந்ததும் அருகில் இருக்கும் வளரக்கூடிய செடி அல்லது மரத்தின் அடியில் ஊற்றி விட வேண்டும். அதே தருணத்தில் நீங்கள் தெரிவு செய்யும் செடி அல்லது மரத்திற்கு முட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். துளசி மற்றும் செம்பருத்தி செடிகளுக்கு ஊற்றுவது உத்தமம்.

அதேபோல் ஆலயங்களுக்கு செல்லும் போது அங்குள்ள மூலவருக்கு மாலை வாங்கி சாற்றி, வழிபட தொடங்குங்கள். முன்னேற்றத்திற்கான மாயத்தடைகள் விலகுவதை உணர்வீர்கள்.

உங்களுடைய தொழிலகத்திற்கு அருகிலோ அல்லது வீட்டிற்கு அருகிலோ இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு தங்க தேர் பவனி ஆலய வளாகத்திற்குள் உலா செல்லும் வாய்ப்பு இருந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடத்தினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.‌

நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும் உங்களுடைய லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி மேஷத்தில் இருந்தால் இந்த எளிய பரிகாரங்களை தொடர்ச்சியாக செய்யும் போது முன்னேற்றம் ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வணிகம் பெருக மேற்கொள்ள வேண்டிய எளிய...

2024-09-17 15:23:32
news-image

கல்வியில் தடையை அகற்றும் இறை வழிபாட்டுப்...

2024-09-17 09:34:38
news-image

முன்னோர்களின் ஆசியை பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய...

2024-09-14 16:38:56
news-image

கடன் பிரச்சினை தீர்வதற்கான பண வரவிற்குரிய...

2024-09-14 16:38:22
news-image

வெற்றி பெறுவதற்கான நட்சத்திர சூட்சமம்...!?

2024-09-12 16:40:45
news-image

கண்டாந்திர நட்சத்திர தோஷமும், பரிகாரமும்

2024-09-11 17:16:39
news-image

தலைமுறை பாவங்களை நீக்கும் மந்திர உச்சாடன...

2024-09-10 14:45:36
news-image

குலதெய்வ சாபத்தை நீக்குவதற்கான பிரத்தியேக வழிபாடு..?

2024-09-09 15:57:29
news-image

அதிர்ஷ்டம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

2024-09-04 18:11:19
news-image

செல்வ வரவை மேம்படுத்தும் எளிய பரிகாரங்கள்...!?

2024-09-03 15:08:38
news-image

ராகு தோஷ பரிகாரங்கள்..!?

2024-09-02 20:26:56
news-image

செல்வ வளம் குவிய மேற்கொள்ள வேண்டிய...

2024-08-31 18:51:29