மியன்மார், ரஷ்யா போன்ற நாடுகளில் கட்டாயத்தின் பேரில் போர், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர்மட்ட வேலைவாய்ப்புகள் வழங்குவதாக ஏமாற்றப்பட்டு, மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர், மியன்மாரில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்கள் மற்றும் அதிக சம்பளம் தருவதாக ஏமாற்றி, ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய - உக்ரேனிய போரில் கட்டாயத்தின் பேரில் தள்ளப்பட்ட இலங்கையர்களை மீட்டு, அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டுதலின் பேரில், ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பிரதிநிதிகளை அந்நாடுகளுக்கு அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி. அலவத்துவல, கே.சுஜித் சஞ்சய பெரேரா, வசந்த யாப்பா பண்டார ஆகியோர் மியன்மார் மற்றும் ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்று, எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி, அந்த இலங்கையர்களை மீட்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM