கம்போடியாவில் தாய்ப்பால் சேகரித்து அமெரிக்க நிறுவனமொன்று ஏற்றுமதி செய்து வந்த நிலையில், தற்போது அந்நாட்டிலிருந்து தாய்ப்பாலை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

கம்போடியாவில் நிலவும் வறுமை காரணமாக ஊட்டச்சத்து இன்றி குழந்தைகள் அவதிப்பட்டு வருவதால் தாய்ப்பால் ஏற்றுமதிக்கெதிராக கடந்தவாரம் ஐக்கிய நடுகல் சபை தமது கணடனத்தை வெளியிட்டிருந்தது.இந்நிகலையில் அந் நாடானது தாய்ப்பால் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் கம்போடியாவிலிருந்து பெறப்படும் தாய்ப்பாலானது, அமெரிக்காவில் 150 மில்லி லிட்டர் சுமார் 300 ரூபாவிற்கு (20 டொலர்)  விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

இந்நிலையில் அந்நாட்டு அரசின் குறித்த அறிவிப்பால் பச்சிளம் குழந்தைகள் வஞ்சிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டு பெண்ணுரிமை மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அத்தோடு குறித்த தாய்ப்பால் விற்பனை மூலம் வருமானம் ஈட்டி வந்த பல தாய்மார்கள் அரசின் குறித்த தடைக்கெதிராக தமது எதிர்ப்பிணை வெளிப்படுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.