மாற்றுத்திறனாளியான பிள்ளையின் வாழ்வியலை பேசும் 'பிள்ளையார் சுழி'

Published By: Digital Desk 7

23 May, 2024 | 03:22 PM
image

'போதை ஏறி புத்தி மாறி' எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, 'டபுள் டக்கர்' எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் தீரஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் 'பிள்ளையார் சுழி' எனும் திரைப்படம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவு செய்யப்பட்டிருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.‌

அறிமுக இயக்குநர் மனோகரன் பெரிய தம்பி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிள்ளையார் சுழி' எனும் திரைப்படத்தில் தீரஜ், அபிநயா, ரேவதி, மைம் கோபி, மேத்யூ வர்கீஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, ஆர் ஜே மகாலட்சுமி ஆகியோர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான உன்னி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா ,ஸ்ரீ ஷரவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர். ஹரி இசையமைத்திருக்கிறார். மாற்றுத்திறனாளியான பிள்ளை ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிள்ளையார் சுழி புரொடக்ஷன்ஸ் மற்றும் எயர் ஃப்ளிக்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் வி. சிலம்பரசி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் பட மாளிகையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் நியூயார்க் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவாகி இருக்கிறது. இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right