(எம்.ஆர்.எம்.வசீம்)
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றும் வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வெளியாட்களை பார்வையிடுவதற்காக விசேட அனுமதி சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இன்றும் நாளையும் சிறைக்கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் உணவு, இனிப்பு பண்டங்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் மாத்திரம் கைதி ஒருவருக்கு பொதுமான அளவு பெற்றுக்கொடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கு உட்பட்டதாக குறித்த வெளியாட்களை பார்வையிடும் நடவடிக்கை நாட்டில் அனைத்து சிறைச்சாலைகளிலும் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM