அவிசாவலையில் நபர் ஒருவர் தமது மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் அவிசாவலை  புவாக்பிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. 

கொல்லப்பட்ட பெண்ணின் வயது 29 என்றும், விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட அவரின் கணவரது வயது 33 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.