உலக பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலாசெயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் இலங்கை 76 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
குறிப்பாக, இலங்கை சுற்றுலா சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு, கலாச்சார வளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அல்லாத செயற்பாடுகள் பிரிவுகளில் மோசமான மதிப்பெண் பெற்றுள்ளது, அதே நேரத்தில் போட்டித்தன்மை மிக்க விலை மற்றும் பயணம், சுற்றுலா சமூக பொருளாதார தாக்கம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு 74-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 119 நாடுகளில் தரவரிசையில் 76 ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இலங்கை 77 ஆவது இடத்தை பிடித்திருந்தது.
இதேவேளை, இலங்கையின் போட்டியாளர்களான வியட்நாம் (59வது), தாய்லாந்து (47வது), இந்தோனேசியா (22வது) மற்றும் மலேசியா (35வது) ஆகியவை சுட்டெண்ணில் இலங்கைக்கு மேலே தரவரிசையில் உள்ளன. மேலும், தெற்காசியாவில் இந்தியா (39வது) முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM