(ஆர்.யசி )

அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க எந்த நோக்கமும் இல்லை.  இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மீன்பிடி படகுகளை விடுவிக்க உள்ளதாக கூறப்படும் செய்திகள் உண்மையில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மீனவ படகுகளை விடுவிக்கவுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கப்படும் நிலையில் அதனை மறுக்கும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்.