தம்புள்ள தண்டர்ஸின் உரிமையாளரின் உரிமைத்துவம் முடிவுறுத்தப்பட்டுள்ளது

Published By: Vishnu

22 May, 2024 | 11:11 PM
image

(என்.வீ.ஏ.)

தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளரின் உரிமைகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் முடிவுறுத்தப்பட்டுள்ளது /மீளப்பெறப்பட்டுள்ளது என லங்கா பிறீமியர் லீக் அறிவித்துள்ளது.

இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிம் ரஹ்மான் எதிர்கொண்ட சட்ட சிக்கல்கள் தொடர்பான அண்மைய விளைவுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என லங்கா பிறீமியர் லீக் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஹ்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மைகள் தெளிவாக இல்லாத போதிலும் லங்கா பிறீமியர் லீக்கின் நேர்மை மற்றும் சுமூகமான ஓட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்தது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.பி.எல்.இன் பெறுமதிகள் மற்றும் நற்பெயர் நிலைநிறுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டும் அனைத்து பங்கேற்பாளர்களும் ஒழுக்கம் மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் உயரிய தரத்தைப் பேணுவதை உறுதிசெய்யும் பொருட்டும் உரிமைத்துவம் முடிவுறுத்தப்பட்டுள்ளது/மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த உரிமைத்துவத்தின் முடிவுறுத்தம்/மீளப்பெறுதலினால் தோன்றியுள்ள விளைவுகளைத் தீர்ப்பதற்கும், அடுத்துவரும் பருவகாலத்தில் குறைந்தபட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்கும் LPL நிருவாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஒரு விறுவிறுப்பான மற்றும் போட்டித்தன்மைமிக்க சுற்றுப்போட்டியை  வழங்குவதில் LPL உறுதியாக உள்ளது மேலும் லீக்கின் நேர்மைத்துவததைப் பேணுவதற்கும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  LPL   எடுக்கும்.

'வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்முறையை மிக உயர்ந்த தரத்தில் பேணுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் தற்போதைய சூழ்நிலையில் எங்களது சகல அணிகளுக்கும் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம்' என LPL உரிமைத்துவத்தைக் கொண்டிருக்கும் IPG குழுமத்தின் தலைவர் அனில் மோகன் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்