ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா ? - முஷாரப் சந்தேகம்

Published By: Digital Desk 7

22 May, 2024 | 08:19 PM
image

(எம்.ஆர்.எம். வசீம். இராஜதுரை ஹஷான்)

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். அதேபோன்று இந்தியாவில்  4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம்.

இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும்.  அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எழுகிறது என ஆளும் கட்சி உறுப்பினர் எம்.முஷாரப் தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்திய அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பாக இந்த சபையில் உறுப்பினர் ஒருவர் குறிப்பிடுகையில், முஸ்லிம் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் இருக்கிறது.

சில காலங்களுக்கு முன்னரும் இது தொடர்பாக சபையில் தெரிவித்திருந்தேன். அதன் பிரகாரம் தற்போது இந்தியாவில் 4முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் இலங்கையில் மீண்டும் ஐ.எஸ். தலைதூக்கி வருகிறது என மிகவும் கடும் தொனியில் உரையாற்றி இருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் ஐ,எஸ்.ஐ.எஸ். இந்த தாக்குதலை நாங்கள்தான நடத்தினோம என உரிமை கோரினார்கள்.ஆனார் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு பல வருடங்கள் கடந்தும் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எந்த தொடர்பும் இல்லை என இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அனைத்து விசாரணை குழுக்களும் தெரிவித்துள்ளன.

இவ்வாறு இருக்கையில், ஏப்ரல் 21தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியது என்றும் இறந்துதிவிட்டதாக தெரிவிக்கப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் பக்தாதி தான் உயிருடன் இருக்கிறேன் என அறிவித்தார் என சொல்லப்பட்ட விடயங்களுக்கு பின்னால் தேசிய, சர்வதேச பெரும் சதி இருப்பதை எமது நாட்டு மக்கள் இப்போது புரிந்திருக்கின்ற சூழலில்தான், இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4இளைஞர்களின் சம்பவத்தை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் தொடர்புபடுத்தி. இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் மேலும் தலைதூக்கப்போகிறது என்ற போர்வையில் தற்போது சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் 2021 ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்ட காலமும் ஒரு தேர்தல் காலம். இப்போது இந்த கைது செய்யப்பட்டிருக்கும் காலகட்டம், இந்தியாவை பொறுத்தவரையில் தேர்தல் இடம்பெற்றுவரும் கால கட்டம். இலங்கையை பொறுத்தவரை விரைவில் ஒரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஒரு காலகட்டாமாகும்.  அதனால் தேர்தல் வெற்றியை மையப்படுத்தி, புனையப்படுகின்ற ஒருவிடயமாக இது இருக்கக்கூடும் என்ற ஒரு சந்தேகம் எமக்கு எழுந்தால் அதனை யாரும் மறுத்துவிட முடியாது. ஏனெனில் ஏப்ரல் 21தாக்குதல் அப்படியானதொரு தோற்றப்பாட்டைததான் இந்த தேசத்துக்குள் உருவாக்கியது. 

அன்றும் இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்கள்.தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலுக்கு இந்தியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறுபட்ட சம்பவங்கள் கருத்துக்கள் இருக்கிற்ன நிலையில், புதிதாக வந்திருக்கும்  இந்த செய்தி குறித்து நாட்டில் இருக்கின்றன சிங்கள,தமிழ்.முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். மீண்டும் ஒரு தேர்தலை வெற்றிகொள்வதற்காக இவ்வாறான தாக்குதல் அல்லது பயங்கரவாதம் போன்ற பொய்யான கருத்துக்களைக்கொண்டு ஊடுருவுக்கின்ற அரசியல் சக்திகளை தீய சக்திகளை தோற்கடிக்கின்ற பெரும்பாெறுப்பு இந்த தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு இருக்கிறது.

உண்மையில் பயங்கரவாத்துடன் தொடர்புபட்ட யாராவது கைதுசெய்யப்பட்டிருந்தால் உரியமுறையில் விசாரிக்கப்பட்டு உரிய தகவல் தெரிவிக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு தேர்தலை மையப்படுத்தியதாக, எப்ரல் 21 தாக்குதலைப்போன்றதான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கின்ற நாேக்கில் இது நடைபெறுமாக இருந்தால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாணந்துறையில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்திய...

2025-01-15 15:54:12
news-image

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க...

2025-01-15 15:46:58
news-image

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய...

2025-01-15 15:13:18
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-01-15 15:08:00
news-image

சீன ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர

2025-01-15 15:04:13
news-image

இந்தியாவின் 76 வது குடியரசு தினத்திற்கு...

2025-01-15 14:53:41
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர்...

2025-01-15 14:33:19
news-image

சிகிரியா இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக...

2025-01-15 14:25:36
news-image

தொடங்கொடை துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் வெளியான...

2025-01-15 14:23:57
news-image

மட்டக்களப்பில் தொடர் மழையால் வயல் நிலங்கள்...

2025-01-15 13:41:27
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த "பியுமா"...

2025-01-15 12:52:44
news-image

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'வெலேசுதா' உட்பட...

2025-01-15 12:57:59