(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த ஓரிரு தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 17,325 குடும்பகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, மரம் முறிந்து விழுந்ததில் காலி மாவட்டம் - இமதுவ பிரதேச செயலகப்பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இரத்தினபுரி மற்றும் அநுராதபுரத்தில் இயற்கை அனர்த்தங்களால் 11 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை மற்றும் காற்றினால் இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, அநுராதபுரம், கண்டி, காலி, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, அம்பாந்தோட்டை, பதுளை, மாத்தறை, குருணாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டங்களில் 17,230 குடும்பங்களைச் சேர்ந்த 68,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அநுராதபுரத்தில் இரு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, ஏனைய மாவட்டங்களில் 531 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன. இதே வேளை 27 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மன்னார், புத்தளம், குருணாகல், மாத்தளை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஓரளவு அதிக மழை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மாகாணத்தின் மேற்கு திசையிலும், வடக்கு, வடமத்திய , மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த காற்று வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM