(நெவில் அன்தனி)
இண்டியன் பிறீமியர் லீக்கின் 17ஆவது அத்தியாயத்தின் கடைசிக் கட்டத்தில் நான்கு தோல்விகளைத் தொடர்ச்சியாக எதிர்கொண்ட ராஜஸ்தான் றோயல்ஸும் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை ஈட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரும் அஹமதாபாத்தில் இன்று புதன்கிழமை (22) இரவு நடைபெறவுள்ள நீக்கல் போட்டியில் சந்திக்கவுள்ளன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையில் அஹமதாபாத்தில் நடைபெறவிருந்த 63ஆவது ஐ.பி.எல். போட்டி மழையினால் கழுவப்பட்டதால் ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கடைசிப் போட்டியும் மழையினால் கழுவிப்போனது.
மறுபுறத்தில் ப்ளே ஓவ் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற இரண்டும் கெட்டான் நிலையிலிருந்த றொயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தனது திறமையை மீண்டும் பறைசாற்றியிருந்தது.
சென்னை சுப்பர் கிங்ஸுக்கு எதிரான கடைசிப் போட்டியில் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாலேயே அதன் ப்ளே ஓவ் வாய்ப்பு உறுதியானது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 8 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தில் இருந்தது.
இதன் காரணமாக அவ்வணி முதலாவது அணியாக போட்டியிலிருந்து வெளியேறக்கூடும் என்ற அபிப்பிராயம் அதிகரித்தது.
ஆனால், அதன் பின்னர் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக அதேவேளை மிக இலகுவாக வெற்றியீட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடைசி அணியாக ப்ளே ஓவ் சுற்றில் நுழைந்தது.
இந்த இரண்டு அணிகளினதும் கடைசிக் கட்டப் போட்டிகளின் பெறுபேறுகளுக்கு அமைய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று இரண்டாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்தாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் ஜெய்பூரில் ஏப்ரல் 6ஆம் திகதி இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொண்டபோது ராஜஸ்தான் றோயல்ஸ் 6 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
அப் போட்டியில் விராத் கோஹ்லி குவித்த சதத்தை ஜொஸ் பட்லரின் சதம் வீண்போகச் செய்திருந்தது.
எனவே இன்றைய போட்டி றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு இலகுவாக அமையும் என எதிர்பார்க்க முடியாது.
எவ்வாறாயினும் என்ன விலை கொடுத்தேனும் 2ஆவது தகுதிகாண் போட்டிக்கு முன்னேறவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இரண்டு அணிகளும் விளையாடும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.
மேலும் இன்றைய போட்டியில் எந்த அணி சகல துறைகளிலும் பிசகாமல் விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும்.
அணிகள் (பெரும்பாலும்)
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு: விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் (தலைவர்), ரஜாத் பட்டிடார், கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லொம்ரோர், ஸ்வப்னில சிங், கர்ண் ஷர்மா, லொக்கி பேர்கசன், யாஷ் தயாள், மொஹமத் சிராஜ்.
ராஜஸ்தான் றோயல்ஸ்: யஷஸ்வி ஜய்ஸ்வால், டொம் கோஹ்லர்-கெட்மோர், சஞ்சு செம்சன் (அணித் தலைவர்), ரியான் பரக், த்ருவ் ஜுரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ட்ரென்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்த்ர சஹால், ரோவ்மன் பவல்.
இரண்டு அணிகளிலும் இம்பெக்ட் வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM