'சசிகுமாரும், உன்னி முகுந்தனும் நண்பர்கள். உன்னி முகுந்தனின் விசுவாசி சூரி. இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் சம்பவங்களும், அது தொடர்பான கதையாடல்களும் தான் 'கருடன்' படத்தின் மையப்புள்ளி' என படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் மண் சார்ந்த படைப்புகளை தெரிவு செய்து திரையில் வழங்குவதில் நிபுணர்களாக திகழும் சசிகுமார் -சூரி -உன்னி முகுந்தன் ஆகியோர் ஒன்றிணைந்து நடித்திருக்கும் 'கருடன்' திரைப்படம் இம்மாதம் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
இயக்குநர் துரை. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படத்தில் சசிகுமார், சூரி, உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, மைம் கோபி, துஷ்யந்த் ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கிராமப்புற பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
''இந்தப் படத்திற்கு ஆதி- கர்ணன் என இரண்டு கதாபாத்திரங்கள் தான் இரண்டு தூண்கள். இதில் ஆதி எனும் கதாபாத்திரத்தில் சசிகுமார், கர்ணன் எனும் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் உன்னி முகுந்தனின் முரட்டு விசுவாசி சொக்கன் எனும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். இந்த மூன்று நட்சத்திரங்களுக்கு இடையே நடைபெறும் மோதலை மையப்படுத்தி தான் இப்படத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஐந்து பெண் கதாபாத்திரங்களும் உண்டு. இவை அனைத்தும் கதையோட்டத்தில் அழுத்தமான இடத்தை பிடித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களின் வழியாகவும் இந்த படைப்பினை பார்வையாளர்கள் உள்வாங்கி ரசிக்க முடியும். அதற்கேற்ற வகையில் வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதற்காக நேர்த்தியான திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சங்களாக சண்டை காட்சிகளும் பின்னணி இசையும் நட்சத்திர நடிகர்களின் தனித்துவமான நடிப்பும் இயல்பான உரையாடல்களும் என ஒவ்வொரு விடயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறோம். மே 31 ஆம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
முன்னதாக வெளியிடப்பட்ட 'கருடன்' படத்தின் முன்னோட்டத்தில் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் சூரியின் நடிப்பு மற்றும் எக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பாடல்களுக்கான காணொளிகளும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM