வைகாசி விசாகத்தின் மகிமை 

22 May, 2024 | 02:20 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலருக்கும் சுய ஒழுக்கம் என்பதும், சுய கட்டுப்பாடு என்பதும் பாரியளவில் குறைந்துவிட்டதால் ஆன்மிகத்தை தேடி பயணிக்கத் தொடங்கிவிட்டனர். வேறு சிலர் தங்களது தவறுகளை (தெரிந்து செய்த தவறுகளையும் தெரியாமல் செய்த குற்றங்களையும்) உணர்ந்து பிராயச்சித்தம் தேடி ஆன்மிகத்தை நாட தொடங்கி இருக்கிறார்கள்.

வேறு சிலர் வழக்கம் போல் இறை நம்பிக்கை மீது அதீத பற்று கொண்டு முருகன் மட்டுமே தமிழ் கடவுள் என்ற கொள்கையில் நம்பிக்கையுடன் பயணிப்பர். 

மேலும், சிலருக்கு முருகனின் அருள் கிடைப்பதற்காக தவம் இருப்பர் அல்லது அதற்காக காத்துக்கொண்டிருப்பர். அவர்களுக்கு உகந்த நாளாக இன்றைய வைகாசி விசாகம் நாள் அமைந்திருக்கிறது.

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர தினத்தன்று தான் முருகப்பெருமாள் அவதரித்தார் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக வைகாசி விசாக தினத்தன்று முருகப்பெருமானை வணங்கினால் அளவற்ற அருள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. அதே தருணத்தில் இன்றைய திகதியில் முருகப்பெருமானை இப்படி வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இன்றைய நாளில் எம்முடைய வீடுகளில் உள்ள பூஜை அறையில் முருகப்பெருமானின் உருவப் படத்தை வைத்து வணங்க வேண்டும். குறிப்பாக ராஜா அலங்காரத்தில் இருக்கும் முருகப்பெருமான்... பால முருகனாக இருக்கும் முருகப்பெருமான்... ஆறு கார்த்திகை பெண்களுடன் இருக்கும் முருகப்பெருமான்... என சில உருவப்படங்களை தெரிவு செய்து பிரத்யேகமாக வணங்குபவர்களும் உண்டு.

இன்றைய நாளில் பூஜை செய்யும்போது கந்தரப்பம் என்ற விசேடமான இனிப்பு தின்பண்டத்தை செய்து படைத்து மற்றவர்களுக்கும் வழங்கி நீங்களும் சாப்பிட்டால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும். கந்தரப்பம் செய்வது எப்படி என்பதை இணையதளத்தை பார்வையிட்டு செய்வதற்கு நேரமில்லை என்றால்... அதற்காக வருத்தப்படாதீர்கள். முருகப்பெருமானுக்கு எப்போது பிடித்த பஞ்சாமிர்தத்தை நீங்களே தயாரித்து அதனை படைத்து வணங்கினாலும் பலன் கிடைக்கும்.

மேலும், இந்த நாளில் ஒரு தட்டில் பச்சை பயிறு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து, அதன் மீது அகல் விளக்கை வைத்து பசு நெய்யை ஊற்றி விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்கினாலும் உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் அவை நிறைவேறும்.

மேலும் இன்றைய தினத்தில் முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்த

''விஸாகம் ஸர்வ பூதாநாம்

ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம்

ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம்

வந்தே ஸிவாத்மஜம்..!'' 

எனும் இந்த மந்திரத்தை உச்சரித்தாலும், ஒரு முறை உச்சரித்தாலும் உங்களுக்கான சுப பலன்கள் விரைவில் கிட்டும்.‌

வைகாசி விசாகம் சிறப்பு தினம் என்பதால் இன்றைய தினத்தில் கட்டிப் பெருங்காயம் சிறிதளவும், ஆறு என்ற எண்ணிக்கையில் கிராம்பினையும், சிறிய அளவிலான மஞ்சள் துணியும் எடுத்து பூஜை அறையில் வைத்து நீங்கள் வணங்குவதற்கு முன், மஞ்சள் துணியில் ஆறு கிராம்பினையும் சிறிதளவு கட்டிப் பெருங்காயத்தையும் வைத்து அதை முடிச்சிட்டு உங்களது கோரிக்கையையும் அதனுடன் இணைத்து முருகனிடம் சமர்ப்பணம் செய்யுங்கள். 

இதன்போது மேலே கூறிய மந்திரத்தை ஒருமுகமான மனதுடன் உச்சரித்து உங்களது கோரிக்கையும் முருகப்பெருமானிடம் சமர்ப்பணம் செய்யுங்கள். அதன் பிறகு அந்த மஞ்சள் துணியிலான முடிச்சினை உங்களுடைய சமையலறையில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை அகற்றி நேர் நிலையான ஆற்றலை, சக்தியின் அளவை அதிகரித்து உங்களின் செல்வ வளத்தை மேம்படுத்தும்.

பொருளாதாரத்தில் தன்னிறைவை பெற்று ஆன்மீகத் தொண்டு பணிக்கு செலவு செய்ய வேண்டும் என எண்ணுபவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்துக்கு இன்றைய தினத்தில் அபிஷேகத்துக்குரிய பொருட்களை தானமாக வாங்கித் தரலாம். அதிலும் குறிப்பாக விபூதி மற்றும் பால் ஆகியவற்றை தானமாக தரலாம். இதனால் உங்களுடைய செல்வ வளம் மேலும் உயரும். 

அட்சய திருதியை தினத்தை விட வலிமையான ஆற்றல் மிகுந்த நாள் என்பதால் இன்றைக்கு உங்களுடைய குடும்பத்திற்கு தேவையான மஞ்சள் தூள், ஊறுகாய், மா-பலா-வாழை எனும் முக்கனி ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய வீட்டுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதுடன் மகாலட்சுமி மற்றும் குபேரனின் அருளும் கிடைத்து செல்வ நிலை மேலும் உயரும்.

முருகப் பெருமானை வைகாசி விசாக தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டாலும் அவரின் அருள் பரிபூரணமாக கிடைத்து திருமண தடை அகலும். புத்திர பாக்கியம் கிட்டும். வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் போட்டிகள் குறைந்து வெற்றி பெறுவீர்கள். இப்படி ஏராளமான நன்மைகளை பெறலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்கள் என்பதால் நாம் தமிழ் இலக்கியங்களோடு...

2024-07-15 11:23:10
news-image

யாழ். வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடம் ...

2024-07-15 11:57:52
news-image

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு...

2024-07-09 17:54:00
news-image

தொலஸ்பாகை தாமரவல்லி ஸ்ரீ முருகன் ஆலய...

2024-07-08 18:08:11
news-image

இலங்கையில் இலக்கிய பாரம்பரியம் இன்னும் மாறவில்லை!...

2024-06-29 14:05:39
news-image

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான்...

2024-06-19 17:59:32
news-image

உலகில் எங்கும் கேட்கக்கூடாத குரல்! :...

2024-06-19 13:34:15
news-image

21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையின் வரலாறு...

2024-06-11 15:50:21
news-image

பல்­லவர் கால கலை­யம்சங்­க­ளுடன் கும்­பா­பி­ஷேகம் காணும்...

2024-06-09 20:13:09
news-image

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மஹா...

2024-06-01 15:46:52
news-image

மட்டக்களப்பில் வைகாசி மாத கதிர்காம யாத்திரையும்...

2024-05-30 10:23:39
news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23