பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உடல்நிலை மோசமாகியுள்ளதால் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனக்கு பிணை வழங்கக் கோரி விமல் வீரவங்ச கடந்த புதன்கிழமை (22) முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த இவரின் உடல்நிலை மோசமாகியுள்ளதால், இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.