சபாநாயகரை சந்தித்தார் தென் கொரியா ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவர்

Published By: Digital Desk 7

22 May, 2024 | 12:55 PM
image

தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் உப தலைவரும் செயலாளர் நாயகமுமான சுங் சியுங்-யுன் (Chung Seung-yun) தலைமையிலான உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்குமிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை  (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுங் சியுங்-யுன்,

 

கடந்த வருடம் இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் மிகவும் பலம் வாய்ந்த சட்டம் என்றும், இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு தென் கொரியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொது நிறுவங்களுக்கான ஒருமைப்பாடு மதிப்பீட்டு முறைமையை (Integrity Assessment System) இலங்கையிலும் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

இதன் போது கருத்துத்தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,

இலங்கையில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டம் முற்றுமுழுதாக சுயாதீனமானது எனவும் அதன் மூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கக் கூடியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய ஆதரவளிக்கும் நாடுகளுடன் இணைந்து இதனை செயல்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

அதற்கு மேலதிகமாக, தென்கொரியாவில் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் செயன்முறை, விசாரணை நடவடிக்கைகளின் தன்மை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் இந்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் தென் கொரியாவின் ஊழல் எதிர்ப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் லீ பீம் சியோக், பிரதிப் பணிப்பாளர் மூன் ஜோங்பில், உதவிப் பணிப்பாளர் செல்வி லீகாயோன், இலங்கையின் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் எம்.ஆர்.வை.கே. உடுவெல மற்றும் டபிள்யு.எம்.டி.டீ. பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முறையான இலவச சுகாதார சேவைக்காக ஐக்கிய...

2024-09-15 17:17:38
news-image

ஒரு மில்லியன் தொழில் முனைவோர் திட்டம்...

2024-09-15 16:50:27
news-image

24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்...

2024-09-15 16:57:39
news-image

கட்டுகஸ்தோட்டையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு 

2024-09-15 16:17:53
news-image

யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரப்பகிர்வுடன்...

2024-09-15 17:48:43
news-image

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-09-15 15:52:43
news-image

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஆலோசகர்...

2024-09-15 15:34:37
news-image

அரலகங்வில பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர்...

2024-09-15 15:25:01
news-image

வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர் -...

2024-09-15 17:44:15
news-image

மட்டக்குளியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-09-15 14:45:39