பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறித்து உரிய நடவடிக்கை எடுங்கள் - ஹர்ஷ டி சில்வா சபாநாயகரிடம் வலியுறுத்தல்

Published By: Digital Desk 7

22 May, 2024 | 01:16 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

விசா விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்க குழுவுக்கு முன்னிலையாகுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு அழைப்பு விடுத்தியிருந்தோம்.

இருப்பினும் இந்நிறுவனங்களின் அரச அதிகாரிகள்  குழுவுக்கு முன்னிலையாகவில்லை.ஆகவே இந்நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைளை முன்னெடுங்கள் என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நிலையியற் கட்டளையின் 121 ஆவது பிரிவுக்கு அமைய அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு அரச நிறுவனங்களை அழைத்து விசாரணைகளை முன்னெடுக்கிறோம்.

வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு விசா விநியோக சேவை வழங்கப்பட்டுள்ளதால்  ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து விளக்கம் கோருவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு,குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு இன்று  கடந்த 13 மற்றும் 14 ஆம்  திகதிகளில் முன்னிலையாகுமாறு அழைத்திருந்தோம்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.யு.குணதிலக,அமைச்சின் மேலதிக செயலாளர் கருணாரத்ன, பிரதான நிதி அதிகாரி பதிரன மற்றும் சட்ட அதிகாரி உப சிறி உட்பட நால்வரையும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுப்பிட்டிய,மேலதிக கட்டுப்பாட்டாளர் இமால் குணவர்தன, நிதி முகாமைத்துவ அதிகாரி பி.ஜயசிங்க ஆகியோரை குழுவுக்கு முன்னிலையாகுமாறு அழைத்திருந்தோம்.

அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு முன்னிலையாகுவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களம்.'தாம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அலுவலகத்தை மாற்றினோம்.ஒருசில கோப்புக்கள் கிடைக்கவில்லை.

ஆகவே குழுவுக்கு முன்னிலையாக முடியாது' என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார்கள்.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தின்  விருப்பத்துக்கு அமைவாகவே திகதி ஒதுக்கப்பட்டது.ஆகவே  குழுவுக்கு முன்னிலையாகுமாறு அறிவித்திருந்தேன்.

நிதி தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அது குறித்து குழுவுக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்தால்  இந்நிறுவனங்கள் கட்டாயம் குழுவில் முன்னிலையாக வேண்டும்.ஆனால் இவர்கள் முன்னிலையாகவில்லை.

இது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் ஒரு செயற்பாடாகும்.மக்களின் பிரச்சினை பற்றி பேசுகிறோம்.ஆகவே அரச நிறுவனங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் பாராளுமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34