வவுனியாவில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டுள்ள துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கம் தமது ஊழியர்களின் 7 கோரிக்கையினை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

வவுனியா பொது வைத்தியசாலையின் இன்றைய பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலையிலுள் மருந்து வழங்கும் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

பெருமளவானவர்கள் மருந்து எடுப்பதற்கு வந்திருந்தபோதும் மருந்து வழங்கும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

தமது மேலதிக கொடுப்பனவு பதவி உயர்வு போன்ற 7கோரிக்கையினை நிவர்த்தி செய்யுமாறு தெரிவித்து இன்று நாடு தழுவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.