மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கடந்த 18 வாரங்களில் (நான்கரை மாதம்) கண்டி மாவட்டத்தில் 1621 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2023 ம் ஆண்டு இக் காலப் பகுதியில் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1440 ஆகும். அதன்படி இவ்வருடம் 181 நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்நிலையில் தற்போது நிலவுகின்ற அதிக மழை காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பதால் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் சுற்றாடலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் சுகாதார அதிகாரிகள் வீட்டு சூழல்களை பரிசோதிப்பதற்காக வீடு வீடாக வர உள்ளதாகவும் நுளம்புகள் பரவும் விதத்தில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM