ஆசிய தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்: ஆண்களுக்கான 4 x 400 மீ. தொடர் ஓட்டத்தில் இலங்கைக்கு தங்கம்

Published By: Vishnu

21 May, 2024 | 10:09 PM
image

(நெவில் அன்தனி)

தாய்லாந்தின் பாங்கொங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண ஆசிய தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில்  இலங்கை அணியினர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.

இந்தியா, வியட்நாம், கத்தார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சைனீஸ் தாய்ப்பே ஆகிய அணிகளை வெற்றிகொண்டே இலங்கை தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 04.48 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

தங்கம் வென்ற இலங்கை தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, பசிந்து லக்ஷான் கொடிகார, தினூக்க தேஷான், காலிங்க குமாரகே ஆகியோர் இடம்பெற்றனர்.

எவ்வாறாயினும், நேரடி  ஒலிம்பிக்  தகுதிக்கான  அடைவு மட்டத்தை இலங்கை அணி தவறவிட்டமை ஏமாற்றம் அளிக்கிறது. 

எனினும் அடுத்துவரும் தொடர் ஓட்டப் போட்டிகளில் இலங்கை அணியினர் வெற்றிபெற்றால் சர்வதேச தரவரிசை புள்ளிகளின் அடிப்படையில் இலங்கை தொடர் அணிக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் நம்பப்படுகிறது.

இன்றைய போட்டியில் இந்தியா (3:05.76) வெள்ளிப் பதக்கத்தையும் வியட்நாம் (3:07.37) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி: பெண்களுக்கான...

2024-06-17 15:09:39
news-image

நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர்...

2024-06-17 12:17:46
news-image

நெதர்லாந்துடனான போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை...

2024-06-17 11:23:06
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா; சுப்பர் 8...

2024-06-16 14:49:20
news-image

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல்...

2024-06-16 09:48:26
news-image

இரண்டு கோடி ரூபா செலவில் சிட்டி...

2024-06-16 09:50:23
news-image

முதல் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை...

2024-06-15 21:16:15
news-image

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை;...

2024-06-15 16:23:37
news-image

சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது...

2024-06-15 10:36:16
news-image

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால்...

2024-06-15 06:57:40
news-image

ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே...

2024-06-14 13:52:46
news-image

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப்...

2024-06-14 01:42:11