தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 குடும்பங்கள் பாதிப்பு!

Published By: Vishnu

21 May, 2024 | 06:25 PM
image

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. ஜே/26 கிராம சேவகர் பிரிவிலும் ஜே/21 கிராம சேவகர் பிரிவிலும் அடிப்படை கட்டமைப்பு ஒவ்வொன்று சேதமடைந்துள்ளதுள்ளன.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/232 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/263 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 80.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை...

2024-06-17 19:00:39
news-image

வாடகை வீட்டிற்கும் வரி : சர்வதேச...

2024-06-17 17:31:38
news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35
news-image

களுத்துறையில் இளைஞர் கடத்தல் ; பொலிஸார்...

2024-06-17 15:25:46