மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சைகள்

21 May, 2024 | 05:47 PM
image

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறை, உணவுமுறை ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால்... நோய் பாதிப்பின் சதவீதம் அதிகரித்து வருகிறது என்று சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுவதும், அதற்கு உடனடியாக சிகிச்சை அளித்து முழுமையான நிவாரணமளிப்பதும் தற்போதைய மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில் நுட்பங்களால் இயல்பான விடயமாகிவிட்டது.

இந்நிலையில் மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் Percutaneous Transhepetic Biliary Drainage எனும் புதிய சிகிச்சை முறை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹெபடைடிஸ் ஏ முதல் ஹெபடைடிஸ் ஈ வரையிலான வைரஸ் தொற்றுக்கள் பாதிப்பின் காரணமாக கல்லீரலில் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த வகையினதான மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளின் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

மேலும் பித்தப்பையில் உண்டாகும் கற்கள் காரணமாக பித்தப் பாதை அடைப்பு ஏற்பட்டு, கல்லீரலில் பாதிப்பு உண்டாகி மஞ்சள் காமாலை பாதிப்பு தோன்றக்கூடும். வேறு சிலருக்கு கணையத்தில் வீக்க பாதிப்பு ஏற்பட்டு அல்லது கணையத்தில் கட்டிகள் உருவாகி அதன் காரணமாகவும் கல்லீரலில் பாதிப்பு உண்டாகி மஞ்சள் காமாலை நோய் ஏற்படக்கூடும்.‌ இதற்கு சத்திர சிகிச்சை மூலம் தான் முதன்மையான தீர்வினை வைத்தியர்கள் வழங்கி வருகிறார்கள்.. ERCP ( Endoscopic Retrograde Cholangio Pancreatography) எனும் சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். அப்போது உணவு பாதை வழியாக பிரத்யேக குழாயை உள்ளே செலுத்தி, பித்தப் பாதையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி, மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணமளிப்பார்கள்.

சில நோயாளிகளுக்கு இத்தகைய சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்படும். அத்தகைய தருணங்களில் வைத்திய நிபுணர்கள் PTBD ( Percutaneous Transhepetic Biliary Drainage) எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் தருவர். இத்தகைய சத்திர சிகிச்சையின் போது மிக நுண்ணிய வடிவத்திலான குழாயை கல்லீரலுக்குள் செலுத்தி, பித்த பாதையை அடைந்து அங்குள்ள அடைப்புகளையும் பாதிப்புகளையும் சீராக்குவர்.  இதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்கும்.

மேலும் மஞ்சள் காமாலை காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் இத்தகைய சத்திர சிகிச்சை நல்லதொரு பலனை வழங்கும்.‌ இத்தகைய சத்திர சிகிச்சையின் போது கல்லீரலுக்குள் செலுத்தப்படும் குழாய் வழியாக ஸ்டென்ட் எனும் மருத்துவ ரீதியிலான குப்பிகளை அனுப்பி, புற்றுநோய் கட்டிகளை சுற்றி பாதுகாப்பு வளையம் போல் அமைத்து அதனை கட்டுப்படுத்தி அழிக்க இயலும்.  மேலும் இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தும் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை உறுதியாக கடைப்பிடித்தால் பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெறலாம்.

வைத்தியர் செந்தில்நாதன்

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரணமான கண் துடிப்பு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-20 19:53:31
news-image

முதுகெலும்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-06-19 20:19:16
news-image

பித்தப்பை கற்களை அகற்றும் நவீன சிகிச்சை

2024-06-18 17:32:01
news-image

தோள்பட்டை சவ்வு அழுத்தப் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-17 15:50:29
news-image

புற்றுநோய் கட்டிகளை லேப்ரோஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை...

2024-06-15 13:45:29
news-image

தண்டுவடத்தில் ஏற்படும் காசநோய் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-14 16:56:58
news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02