யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

21 May, 2024 | 05:46 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வரும் யோகி பாபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வானவன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் சஜின் கே. சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வானவன்' திரைப்படத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லட்சுமி பிரியா சந்திர மௌலி, குழந்தை நட்சத்திரம் ஷக்தி ரித்விக், 'லவ் டுடே' புகழ் பிரார்த்தனா நாதன், 'கல்கி' ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தோமஸ் ரென்னி ஜோர்ஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் பீல் குட் மற்றும் ஃபேண்டஸி ஜேனரில் 'வானவன்' திரைப்படம் தயாராகி இருக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்படும்'' என்றார்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right