சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் நிறைவு !

21 May, 2024 | 05:46 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துவந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி, திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். அதுதொடர்பாக நேற்று  சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிறைச்சாலை உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் செயற்பட வேண்டாம் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கை நியாயமானது. அதனை நிறைவேற்ற அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து, அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

நீதி அமைச்சரால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதி தொடர்பில் நம்பிக்கை வைத்து, தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு சேவைக்கு திரும்புவதாக பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35
news-image

களுத்துறையில் இளைஞர் கடத்தல் ; பொலிஸார்...

2024-06-17 15:25:46
news-image

சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி...

2024-06-17 15:42:54
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களுடைய பூர்வீக காணிகள்...

2024-06-17 14:46:36