எம்முடைய குடும்ப உறுப்பினர்களில் சிலர் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு மரணமடைந்திருப்பார்கள். வேறு சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு அகால மரணத்தை தழுவியிருப்பார்கள். வேறு சிலர் விடமருந்தியும், புகையிரத வண்டி முன் பாய்ந்தும் தங்கள் நல்லுயிரை மாய்த்துக் கொண்டிருப்பர்.
வேறு சிலர் விவரிக்க இயலாத காரணங்களாலும், தாங்க இயலாத நோயின் கொடுமையின் காரணமாகவும் கருணை கொலையை எதிர்கொண்டிருப்பர். மேற்கண்ட அகால மரணம் காரணமாக அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், அவர்களுடைய வாரிசுகளுக்கும்.. தோஷங்கள் ஏற்படும்.
இதன் காரணமாக அவர்களுக்கு காரியத்தடை, சுப நிகழ்வு தடை, முன்னேற்றத்தில் தாமதம், வளர்ச்சியில் குறைபாடு, தீரா கடன்,.. என பல்வேறு அசுப பலன்களை சந்திப்பர். இவர்கள் குடும்ப ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி பரிகாரங்களை மேற்கொண்டிருந்தாலும், சுப பலன்கள் என்பது குறைவாகவும், தற்காலிகமாகவும் கிடைத்திருக்கும். இந்நிலையில் இவர்கள் சுப பலன்களை தொடர்ச்சியாக பெற வேண்டும் என்றால் .. எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். இதனை உறுதியாக மேற்கொண்டால் சுப பலன்கள் கிட்டும்.
துர் மரணங்களால் ஏற்பட்டிருக்கும் பீடைகளும், எதிர்மறை ஆற்றலும் விலக வேண்டும் என்றால்.. முதலில் உங்களுடைய ஊருக்கு அருகில் இருக்கும் தொன்மையான சிவாலயங்களுக்கு செல்ல வேண்டும். அந்த ஆலய வளாகத்தில் வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ நாலு கால் மண்டபம் என்றொரு அமைப்பு இருக்கும். அந்த அமைப்பில் உள்ள நான்கு கால்களுக்கும் ( நான்கு தூண்களுக்கும்) தீபம் ஏற்றி வழிபடுங்கள். இந்த தீப வழிபாட்டை தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் வரை தொடர வேண்டும். இதற்குப் பின்னர் நீங்கள் ராமேஸ்வரம் அல்லது கடற்கரை பகுதியில் அவர்களுக்கு சிரார்த்த திதியை வழங்கலாம்.
நாலு கால் மண்டபத்தில் என்ன சூட்சமம் அடங்கியிருக்கிறது. அதனை ஏன் விளக்கேற்றி வழிபட வேண்டும்? என்ற வினா எம்மில் பலருக்குள் எழும். ஏனென்றால் இந்த நான்கு கால் மண்டபத்திற்குள் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள், மகான்கள் ஆகியோர் சூட்சமமாக நாளாந்தம் வருகை தந்து இறை சக்தியை வழிபடுவதாக ஐதீகம். இங்கு விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் உங்களுக்கான சுப பலன்களை வழங்குவதில் தடையை ஏற்படுத்தும் தோஷங்கள் விலகும். அதன் பிறகு நீங்கள் துர் மரணங்களுக்கான பரிகாரத்தை செய்தால்.. அந்த பரிகாரம் வெற்றி பெறும். எனவே துர் மரணத்தினால் ஏற்பட்ட தோஷத்தை விலக்க.. தொன்மையான சிவாலயங்களில் அமையப் பெற்றிருக்கும் நான்கு கால் மண்டபத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM