முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை

21 May, 2024 | 01:20 PM
image

போலியான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே இன்று (21) நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்ற பின்னணியில், டயனா கமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற தருணத்தில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகவில்லை.

இந்நிலையில், 5 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

போலியான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட டயனா கமகே தனது தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:35:54
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

கொட்டியாக்கலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீதி பொதுமக்கள்...

2025-03-26 16:38:12
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக...

2025-03-26 16:03:57
news-image

அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பள...

2025-03-26 15:22:44
news-image

புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப்பொதி...

2025-03-26 15:12:39