நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

Published By: Digital Desk 3

21 May, 2024 | 12:45 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஜனாதிபதியாக தான் தெரிவுசெய்யப்பட்டது இலங்கையை அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கே என்றும் அந்த கடப்பாட்டை நிறைவேற்ற தன்னாலியன்றவரை பாடுபடம்போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க எண்ணற்ற தடவைகள் கூறியிருக்கிறார். இதனால் பொருளாதார வெற்றியை சாதிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் நோக்கங்கள் குறித்து  பெருமளவு ஊகங்கள் எழுந்தன.

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில்  ஜனாதிபதிக்கு இருக்கும் பற்றுறுதி தொடர்பில் அவரின் கூற்றுக்களின் உண்மையை மக்களால் விரும்பப்படாத,  செல்வாக்கில்லாத பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக முன்னெடுப்பதில் அவர் காட்டுகின்ற உறுதிப்பாட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய எல்லைக்கும் அப்பால் உயர்ந்த வரிகளை விதிப்பதிலும் பெரும்பாலான ஊழியர்களினால் கடுமையாக எதிர்க்கப்படும் அரச நிறுவனங்களின் தனியார் மயமாக்கலை முன்னெடுப்பதிலும் ஜனாதிபதி தளராமல் ஈடுபட்டுவருகிறார்.

இந்த இரு கொள்கைகளும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான முயற்சிக்கு பாதகமாக அமையக்கூடிய அளவுக்கு செல்வாக்கு இலலாதவையாக இருக்கின்றன. ஆனால் அவர் மிகுந்த  நம்பிக்கையுடன் அவற்றில் உறுதியாக நிற்கிறார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரேயொரு உறுப்பினராக இருந்தபோதிலும் கூட அதிர்ச்சி தரும் வகையில் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவான உடனடியாக விக்கிரமசிங்க அளித்த இரண்டாவது வாக்குறுதி ஒன்றும் இருக்கிறது. சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இலங்கையுடன் இருந்துவரும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டிய கடப்பாடு தனக்கு இருக்கிறது என்று உணருவதாகவும்  எதிர்காலச் சந்ததிகளுக்கு ஒரு சுமையாக அந்த பிரச்சினையை விட்டுச் செலலப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

போரின் விளைவான உறுதிப்பாடின்மை காரணமாக காரணமாக இலங்கை முப்பது வருடகால வெளிநாட்டு முதலீட்டையும் அதனால் அடையக்கூடிய அபிவிருத்தயையும் இழந்தது என்பது மிகையான கூற்று அல்ல. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து கடந்த காலத்தில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள்் நடத்தப்பட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்படடன   என்று கூறிய ஜனாதிபதி அந்த முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு வெற்றிகரமாக தீர்வைக் காண்பதற்கு  பாடுபடப்போவதாக மக்களுக்கு உறுதியளித்தார். இலங்கையின் 75 வது சதந்திர தினத்துக்கு  முன்னதாக அரசியல் தீர்வொனறைக் காணப்போவதாக அவர் கூறினார். ஆனால் அந்த சுதந்திரதினத்துக்கு பிறகு ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலம் கடந்துவிட்டது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னரான கடந்த இரு வருடங்களாக  இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பிலான தனது நோக்கை விக்கிரமசிங்க சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைத்திருக்கிறார். இதை அவர் சர்வதேச அரங்குகளிலும் உள்நாட்டு அரங்ககிலும் எண்ணற்ற தடவைகள் செய்திருக்கிறார். உதாரணமாக, இவ்வருடம் மார்ச் மாதத்தில் கொழும்பில் தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதங்களுக்கு இடையிலான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் தனது  மனதில் இருந்த அரசியல் தீர்வுக்கு அவசியமான அம்சங்களை இருபது நிமங்கள்  தெளிவாக விளக்கினார்.  நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் சகல மதங்களையும் சேர்ந்த மதகுருமார் அந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

ஆனால், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் துரதிர்ஷ்டமாக, நல்லிணக்கத்துக்கான அந்த சீர்திருத்தங்களை பொருளாதார மறுசீரமைப்பில் காட்டுகின்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி முன்னெடுக்கவில்லை. இரு விவகாரங்களிலும் பற்றுறுதி வேறுபட்ட அளவில் இருப்பதாக தெரிகிறது.

ஜனாதிபதியின் தோல்வி

நல்லிணக்கம் மற்றும் இனப்பிரச்சினைக்கான  அரசியல் தீர்வு தொடர்பிலான தனது சொந்த நோக்கிலேயே உறுதியாக நிற்க ஜனாதிபதி தவறியதனால் நாட்டுக்கு பெரும் பாதிப்பு  ஏற்பட்டிருக்கிறது. தேசிய நல்லிணக்கம் தொடர்பில் நிலையுறுதியான கொள்கை இல்லாததன் விளைவை கடந்த இரு வாரங்களில் துரதிர்ஷடவசமான முயைில்  தெளிவாகக் காணக்கூடியதாக இருந்தது.

போரின் இறுதிக்கட்டத்தில் இறந்துபோன தங்களது அன்புக்குரியவர்களை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூருவதை தடுப்பதற்கு பொலிசார் கையாண்ட மோசமான அடாவடித்தனத்துடன் இது தொடங்கியது. போரின் அந்த இறுதி நாட்களின் துன்பியலை நினைவுகூருவதற்கும் அந்த நாட்களில் எங்குமே தப்பிச்செல்ல முடியாத நிலையில் போர்க்களத்திற்குள் சிக்கிக்கொண்ட மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கு குடித்த கஞ்சியை பகிர்ந்து கொள்வதற்கும் தமிழ் மக்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்கு பொலிசார் தவறான முறையில் நீதிமன்ற உத்தரவுகளை பெறும் அளவுக்கு பொலிசார் கொடூரமாக நடந்துகொண்டனர்.

ஒரு சில இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை  தடுக்க பொலிசார் மிகவும் மோசமான அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். வேறு பல இடங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை இந்த நடவடிக்கை தடு்த்திருக்கக்கூடும். ஆனால் இந்த சம்பவங்களின் காட்சிகள்  தொடர்பான காணொளிகள்  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவிவிட்டன. இது அரசாங்கத்துக்கு நிச்சயமாக கெட்டபெயரை ஏற்படுத்தியிருக்கிறது.

பொலிசாரின் உத்தரவுகளை மீறி தங்களது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்த பெண்மணிகளின் வீடுகளுக்கு பொலிசார் சென்றதை காண்பிக்கும் காணொளி அவற்றில் ஒன்று. பெண்களின் வீடுகளுக்குச் சென்று தங்கள் கைவரிசையைக் காட்டுவதற்கு பொலிசார் இரவு வேளையைத் தெரிவுசெய்தனர். இரவில் பெண்களை்கைது செய்வது சுலபம் என்று நினைத்தார்கள் போலும். ஆனால் கைது செய்யப்படுவதை  பெண்கள் கடுமையாக எதிர்த்ததை அடுத்து அவர்களை கதறக்கதற  பொலிசார் பலவந்தமாக தங்களது வாகனங்களுக்கு இழுத்துச் சென்றனர்.

பொலிசார் மோசமாக நடந்துகொண்ட இன்னொரு சம்பவம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தஙகளுக்குள் கஞ்சி விநியோகித்து நினைவேந்தலில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவொன்றை பொலிசார் தடுத்தனர். பிறகு அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் நீதிமன்ற உத்தரவு மாற்றப்பட்டதும் அத்தகைய நினைவேந்தல்கள் அனுமதிக்கக்கூடியவை என்று ஜனாதிபதியே கூறினார். அதற்கு பிறகு அந்த மாணவர்கள்  நினைவேந்தலை தொடர்ந்து முன்னெடுப்பதை பொலிசார் பலவந்தமாக தடு்க்கவில்லை.

ஆனால் மாணவர்களுடன் மிகவும் ஆவேசமாகப் பேசி பொலிசார் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். மாணவர்களைப்ாபயமுறுத்துவதற்காக அவர்களையும் நிகழ்வையும்  பொலிசார் நெருக்கமாக நின்று வீடியோவில் பதிவுசெய்தனர். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு அந்த வீடியோவை பொலிசார் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

நல்லிணக்கம் இல்லை

முள்ளிவாய்க்கால் தினத்துக்கு முன்னதாக இரு வாரங்களாக வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்ற சம்பவங்கள்  நல்லிணக்கத்தை அல்ல, மனக்கசப்பையும் முரண்நிலையையுமே வெளிக்காட்டின. இது 2015 ஆம் ஆண்டில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சகல 47 நாடுகளுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கைச்சாத்திட்ட இணக்கப்பாட்டில் இருந்து உத்வேகத்தைப் பெறும் அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானதாகும்.

அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலான தீர்மானத்தின் பிரகாரம் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. 2016 -- 2018 காலப்பகுதியில் காணாமல் போனோர் விவகார அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு விக்கிரமசிங்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆதைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விடாப்பிடியாக முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், உண்மையில் களத்தில் இடம்பெறுபவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய நல்லிணக்கச் செயன்முறைகளை உறுதியாக முன்னெடுப்பதில் அரசாங்கத்தின் ஆர்வம் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறது.

போர் மற்றும் பிரிவினைச் சூழ்நிலையில் இருந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நோக்கச் செல்வதற்கு ஒரு நாடு விரும்பினால் அதற்கு சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நான்கு படி செயன்முறை ஒன்று இருக்கிறது. மோதல் காலகட்டத்தில் நடந்தவையைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்தல், சட்டத்தை மீறியவர்களை பொறுப்புக் கூறவைத்தல், மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டை வழங்குதல், மோதலுக்கான மூலவேர்க் காரணிகள் கையாளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் ஆகியவையே அந்த நான்கு படி செயன்முறையாகும்.

தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அரசாங்கம் மீது இருக்கும் சந்தேகங்களை போக்குவதற்கு  ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு இன்னும் காலஅவகாசம் இருக்கவே செய்கிறது. நல்லிணக்கச் செயன்முறையைப் பொறுத்தவரை, இலங்கை தொடர்பில் சரவதேச அரசியல் சூழ்நிலை கூடுதலான அளவுக்கு எதிர்மறையானதாக மாறிவருவதால் மேற்கூறப்பட்ட செயன்முறையை ஜனாதிபதி விரைவாக செய்யவேண்டியது அவசியமாகும். இந்த எதிர்மறையான சர்வதேச அரசியல் சூழ்நிலை பொருளாதார மீட்சியை நோக்கிய செயன்முறை மீதும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்க முடியும்.

இலங்கயில் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்ற கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் வருடாந்த அறிக்கை, தமிழ் ஈழம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தக்கோரி  அமெரிக்க காங்கிரஸில் இரு தரப்பையும் சேர்ந்த உறுப்பினர்கள் குழுவொன்றினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பிரேரணை, மனித உரிமை மீறல்களில் அரச பாதுகாப்பு படைகளுக்கும் துணைப்படைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது

என்பதை ஒத்துக்கொண்டு அரசாஙகம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனத உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஆகியவை சுலபமாக அலட்சியம் செய்யக்கூடியவை அல்ல.

பலம்பொருந்திய உலக சக்திகள் எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடுகள் நல்லிணக்கம் தொடர்பிலான பிரச்சினை அதன்பாட்டில்  மேம்படப்போவதில்லை  அதை முன்னெடுக்க செயலூக்கத்துடன் உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதை காட்டுகின்றன.

எஞ்சியிருக்கின்ற காலப்பகுதி குறுகியதாக இருப்பதால்  நல்லிணக்கம் தொடர்பில் வழிவரைபடம்  ஒன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி சர்வகட்சி மகாநாடொன்றைக் கூட்டவேண்டும். சர்வகட்சி மகாநாடு என்பது மந்திரமான ஒரு தீர்வு அல்ல என்கிற அதேவேளை சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு செயன்முறை என்பதால் நல்லிணக்கத்தையும் உறுதிப்பாட்டையும் நோக்கிய ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையாக அமையமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காயமடைந்த புலிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய...

2024-06-23 18:27:21
news-image

தொழிலாளர்களின் நாட்சம்பளம் எவ்வளவாக இருத்தல் வேண்டும்?

2024-06-23 12:56:32
news-image

நீதித்துறையின் மீதான நிறைவேற்றுத்துறையின் பாய்ச்சல்

2024-06-23 10:42:42
news-image

ஜீவனுக்கு எதிரான முதலாளிமார் சம்மேளனத்தின் போர்க்கொடி 

2024-06-23 10:36:16
news-image

பாத யாத்திரை பாரம்பரியத்தை பேணுவது போல்...

2024-06-23 09:54:12
news-image

Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள்...

2024-06-22 13:44:21
news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51