சதொச விற்பனை நிலையங்களை விரிவுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

Published By: Devika

29 Mar, 2017 | 11:15 AM
image

தரமிக்க உணவு மற்றும் நாளாந்த நுகர்வுப் பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கும் நோக்கில், நாடெங்கும் சதொச விற்பனைக் நிலையங்களை அமைக்கும் அரசின் திட்டத்தின் கீழ், முதலாவது சதொச விற்பனை நிலையத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (28) கொஹுவலையில் திறந்து வைத்தார்.

கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், லங்கா சதொச தலைவர் டி.எம்.டி.தென்னக்கோன் உட்படப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனுடன், நாட்டின் பல்வேறு பாகங்களில் மொத்தமாக 52 சதொச விற்பனை நிலையங்கள் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளன.

கொஹுவலை சதொச நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, குறித்த நிலையத்தை முழுவதுமாகக் கண்காணித்து சில ஆலோசனைகளையும் அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த விற்பனை நிலையங்களுடன் மொத்தமாக 380 சதொச விற்பனை நிலையங்கள் நாடெங்கும் இயங்கிவருகின்றன. இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 500ஆக உயர்த்துவதே அரசின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53